தமிழுக்கு முதல் நாள்
தமிழாண்டுக்கு முதல் நாள்
தைத்திருநாள் பொங்கல் நாள்
பகலவன் ஒளிபட
பகலவனுக்கே படைத்துண்ணும் நாள்
தைப்பொங்கல் நாளில்
நல் எதிர்காலம் ஒளிர
சின்னப் பொடியன்
உங்கள் யாழ்பாவாணன் சிந்தும்
தைப்பொங்கல் வாழ்த்துகள்!
உலகெங்கும்
பா புனைந்து தமிழ் பரப்பும்
பாவலர்களுக்கும்
உலகெங்கும் தமிழ் பரப்ப
பா புனைய விரும்பும்
உறவுகளுக்கும்
எழுதுகோல் ஏந்தியே
உலகெங்கும் தமிழ் பரப்பும்
எழுத்தாளர்களுக்கும்
உலகெங்கும் தமிழ் பரப்ப
முழுமூச்சோடு இயங்கும்
தமிழ் உறவுகளுக்கும்
என்
இலக்கிய நட்புகளுக்கும்
எனது
தைப்பொங்கல் வாழ்த்துகள்!
இவ்வண்ணம்
உங்கள் யாழ்பாவாணன்
web: http://www.yarlpavanan.tk
email: yarlpavanan@hotmail.com

No comments:
Post a Comment
தங்கள் கருத்துகளை வரவேற்கிறேன்.
உங்கள் யாழ்பாவாணன்.