Saturday, January 24, 2015

பாலகணேஷின் கவிதை எழுதுவது எப்படி?


எழுதத்தான் எண்ணிவிட்டால் எழுதிவிடலாம்
எதைத்தான் எழுதிவிட்டால் மகிழ்ச்சியடையலாம்
அதைத்தான் வலைப்பூக்களில் தேடிவிடலாம்
அப்படித்தான் தேடியதைத்தான் பகிர்ந்துவிடலாம்
அப்படித்தான் பகிர்ந்ததைத்தான் படித்துவிடலாம்

இப்படித்தான் பா/கவிதை புனையத்தான்
எப்படித்தான் எனக்குதவியதோ அதைத்தான்
கவிதை எழுதுவது எப்படி? என்று தான்
பாலகணேஷின் பதிவைத்தான் பகிர்ந்தேன்
நீங்களும் தான் படித்தால் தான்
பா/கவிதை புனையத்தான் வேண்டியதைத் தான்
பாலகணேஷும் சொல்லியதைத் தான்
கருத்தில் கொண்டால் தான்
பா/கவிதை புனையலாம் தான்
என்றெல்லோ சொல்ல வந்தேன்!

"எத்தனையோ நினைக்கிறது நெஞ்சம்
உன்னிடத்தில் சொன்னதெல்லாம் கொஞ்சம்" என
"மின்னல்போல கண்ணில் தோன்றி
   மினுக்கி நடந்திட்டாள் அப்பாவை
கன்னல் மொழியதனைப் பேசி
   என் மனதைத் திருடிவிட்டாள்!" என
மரபுக்கவிதை நடை கூறுகின்றாரே!

"கடவுள் ஒருவர் இருந்தால்
கஷ்டம் இத்தனை தருவானா
திருடன், அயோக்கியனெல்லாம்
மகிழ்வாய்த்தான் திரிவானா?" என
"நிலவு தெரிந்தது
தண்ணீரில் என்
காதலி முகம்!" என
புதுப்பா, துளிப்பா நடை கூறுகின்றாரே!

படித்துத்தான் பார்த்தால் தான்
பா/கவிதை புனையத்தான்
பா/கவிதை நடையத்தான்
கண்டுபிடித்தாலும் தான்
எதுகை, மோனையைத் தான்
சுட்டிச் சொன்னாலும் தான்
சுவை சொட்டத்தான்
இசை முட்டத்தான்
பா/கவிதை இருக்கத் தான்
சற்று இலக்கணந் தான்
தெரிந்தால் போதும் தான்
என்றெல்லாம் எண்ணிக் கொள்ளத்தான்
பதிந்திருக்கிறார் நல்ல பதிவைத் தான்!

அதைத் தான்
நீங்களும் தான் படிக்கத் தான்
கீழுள்ள இணைப்பைத் தான்
உங்களுக்குத் தான் தந்தேனே!
http://minnalvarigal.blogspot.com/2014/01/blog-post_21.html

Thursday, January 15, 2015

தைப்பொங்கல் குறித்துப் பாப்புனைக

பாப்புனைதலும் சரி
கவிதை ஆக்குதலும் சரி
எம் கற்பனைக்கேற்ப எழுதிவிட்டால்
பா/ கவிதை ஆகாதே!
நூலைப் போல சேலை
தாயைப் போல மோளை
பாலைப் போல வெள்ளை
கடுகைப் போல காரம்
என்றடுக்கினால் போல
பா/ கவிதை ஆகாதே!
"பாலைப் போல
வெள்ளைச் சேலை உடுத்த அம்மா
குந்தியிருக்கக் கற கறவென
கிழிஞ்சு போகத் தானே தெரிந்தது
நூலைப் போல தானே
சேலை இருக்குமென்றே!" என்றால்
பா/ கவிதை போலத் தெரிகிறதே!
"தாயைப் போல
மோளைப் பார்த்தால் அழகி - அவளோ
சின்னப் பிள்ளை என்றாலும்
கடுகைப் போல காரமாய் - தன்
அறிவை வெளிப்படுத்தினாளே! என்றால்
பா/ கவிதை போலத் தெரிகிறதே!
தைப்பொங்கல்
குறித்துப் பாப்புனைக என்றதும்
"வளமுள்ளவர் வீடுகள் தோறும்
பொங்கல், படையல் என்றிருக்க
வீடு வீடாகச் சென்று
வளமற்றவர் கையேந்தி நிற்பதையும்
பகலவன் பார்ப்பாரே!" என்றால்
பா/ கவிதை போலத் தெரிந்தாலும்
"பொங்கின புக்கையை (பொங்கல்) விட
தண்டின புக்கையே (பொங்கல்) மேல்..." என்ற
தமிழ் முதுமொழியே நினைவிற்கு வருகிறதே!
பாப்புனைய விரும்பும் உறவுகளே
தைப்பொங்கல் குறித்துப் பாப்புனைய
எழுத்து, அசை, சீர், தளை, அடி, தொடை,
உவமை, எதுகை, மோனை என
எல்லாம் தெரிந்தாலும் கூட
பா/ கவிதை புனையும் திறன் வேண்டுமே!
அதற்குத் தானே
சித்திரமும் கைப்பழக்கம்
செந்தமிழும் நாப்பழக்கம் என்பார்களே
அது போலத் தானே
ஏற்றதொரு பா/ கவிதை புனைய
தேடலும் பயிற்சியும் வேண்டுமே!