Tuesday, November 4, 2014

பாவலர் நா.முத்துநிலவன் வழிகாட்டுகின்றார்!


எழுதுகோல் ஏந்தினால் பாப்புனைய வருமா?
எழுதுதாள் எடுத்தால் பாப்புனைய வருமா?
தலைப்பொன்று தீட்டினால் பாப்புனைய வருமா?
எண்ணியதும் எழுதநாம் காளமேகப் புலவரா?
"பாவும் உள்ளத்தில் கருவுற்றாலே!"

பிரபல நாடக, திரைப்பட வசன ஆசிரியர் கிரேசி மோகன்
வெண்பாப் புனைவதில் வல்லவரெனத் தொடங்கி
எடுத்துக்காட்டாக
எட்டு வெண்பாக்களில் இரண்டரை மட்டும் என்று தொட்டு
யாப்பிலக்கண வழு சுட்டியும் விளக்கியும்
"நமது மரபுப் பாவகைகள்
எல்லாவற்றையும் கரைத்துக் குடித்து,
அதன் பிறகுதான் எழுதவேண்டும் என்று
சொல்ல மாட்டேன்." என்ற பின்
"கொட்டிக் கிடக்கும் குவியலான
பாவகைத் தங்க வைரக் கட்டிகளை எடுத்து, அதில்
வகைவகையான புதுக்கவிதை ஆபரணங்களைச் செய்து
தமிழ்த்தாய்க்குச் சூட்டுங்கள் என்றுதான்
உரிமையோடு வேண்டுகிறேன்." என்றுரைக்கும்
பாவலர் நா.முத்துநிலவன் அவர்களின் வழிகாட்டல்
பாப்புனைய விரும்புவோருக்குக் கோடி பெறுமதி!

முதலில் அகத்தியர் தான்
தமிழ் இலக்கணம் வகுத்தார் என்பது
என் கருத்து என்றாலும் - உங்கள்
எண்ணப்படி முதலாம் இலக்கண நூலாம்
தொல்காப்பியத்தில் கூட பல இடங்களில்
தனக்கு முன்னோர் கூறியதில் இருந்தே
தான் படித்துத் தெளிந்ததை வைத்தே
எழுதியதாகத் தொல்காப்பியரும் சொன்னாரெனின்
நாமும் முன்னோர் நூல்களைப் படித்தே
பாக்களைப் புனைவோம் வாருங்கள்!

அதற்காகவே பாவலர் நா.முத்துநிலவன் அவர்களின்
"இளைய கவிஞர்கள் கவனிக்க" என்ற பதிவில்
பாப்புனைய விரும்புவோரே - நீங்கள்
படிக்க வேண்டிய தொகுப்புகள் பலவுள என்று
எடுத்துக்காட்டாகத் தொடுத்துமுள்ளார்...
பாப்புனைய விரும்புவோரே - நீங்கள்
கீழ்வரும் இணைப்பைச் சொடுக்கி
படித்துப் பயன்பெற்றுப் பெரிய பாவலராக
வாழ்த்தி நிற்பது - உங்கள்
சின்னப்பொடியன் யாழ்பாவாணன்!

10 comments:

 1. எங்கே நல்ல பதிவுகளை ,சிறப்பான பதிவுகளை கண்டாலும் அதை அனைவரும் படித்து பயன் பெற விளக்கத்துடன் அவ்வப்போது உங்கள் தளத்தில் இணைப்பு தருவது பாராட்டுக்குரியது.

  ReplyDelete
  Replies
  1. வலையில் வாசகர் தேடும்
   அறிவுப் பசியைப் போக்க வல்ல
   நல்ல பதிவுகளை இனம் காட்டுவதும்
   தமிழை நாம் வளர்க்க உதவுமே!

   Delete
 2. வழிகாட்டியவரை நீங்களும் வழிகாட்டி விட்டீர்கள் !

  ReplyDelete
  Replies

  1. பாப்புனைய விரும்புவோருக்கு
   பாவலர் நா.முத்துநிலவன்
   வழிகாட்டுகின்றார் என்கிறேன்!

   Delete
 3. நன்றி அய்யா..! முத்துநிலவன் அய்யா முன்மொழிந்ததை, நீங்கள் வழிமொழிந்து இருக்கிறீர்கள்!
  நன்றி !
  வழிகாட்டுங்கள்..! பின்தொடர்கின்றோம்..!

  ReplyDelete
  Replies
  1. தங்கள் கருத்தை ஏற்றுக்கொள்கிறேன்
   மிக்க நன்றி.

   Delete
 4. நன்றி நண்பா. எளிய பாவகை இலக்கணம் எழுத ஆசைதான். அதன் முன்னோட்டம்தானிது.
  விரைவில் எழுதுவேன்.இன்றைய இளைஞர்களிடம் ஏராளமான திறமும், வாழ்க்கை பற்றிய எதார்த்தப் பார்வையும் மிகுந்திருக்கக் காண்கிறேன். நமது பழமரபுச் செல்வங்களை அவர்தமக்கு உரிய முறையில அறிமுகப் படுத்தினால் போதும், பற்றிப் பிடித்துப் பார்முழுதும் வலம்வரும் வாய்ப்பு உண்டு. செய்வோம். உங்களைப் போலும் உற்சாகமளிக்கும் நண்பர்கள் இருக்கும் போது செய்யத் தடையேது? விரைவில்...நன்றிநன்றி

  ReplyDelete
  Replies
  1. எளிய பாவகை இலக்கணம் விரைவில் எழுதுங்கள்.
   "இன்றைய இளைஞர்களிடம் ஏராளமான திறமும், வாழ்க்கை பற்றிய எதார்த்தப் பார்வையும் மிகுந்திருக்கக் காண்கிறேன்." என்பதில் உண்மை இருக்கு! ஆகையால், எளிய பாவகை இலக்கணம் விரைவில் எழுதுங்கள். அப்பணி, எங்கள் இளசுகளிடம் தமிழைப் பேணும் வண்ணம் பாப்புனைய வழிகாட்டும். அப்பதிவுகளைப் படிக்குமாறு எனது வாசகருக்கும் நான் வழிகாட்டுவேன்.
   மிக்க நன்றி.

   Delete
 5. வழிகாட்டு பகிர்வை இன்னும் ஊக்கிவிக்கும் உங்களின் சேவைக்கு வாழ்த்துக்கள் ஐயா.

  ReplyDelete
  Replies
  1. தங்கள் கருத்தை ஏற்றுக்கொள்கிறேன்
   மிக்க நன்றி.

   Delete

தங்கள் கருத்துகளை வரவேற்கிறேன்.
உங்கள் யாழ்பாவாணன்.