காதலிலே தோல்வியுற்ற
காளைக்குத் தெரிந்ததெல்லாம்
வாலையின் வண்ணங்களே...
வாலைக்குத் தெரிந்ததெல்லாம்
காளையின் எண்ணங்களே...
"காதலி...
காதலித்துத் தோல்விகாண்...
அப்ப தான்
பா (கவிதை) புனையலாம்" என்று
சிலர் பிதற்றலாம்...
அதெல்லாம்
ஒரு பக்க எழுத்தெல்லோ!
ஏன்?
இப்படி வாவேன் வழிக்கு...
பார்த்தவனுக்குத் தான் தெரியும்
கண்ணால் பார்த்ததும் கெட்டதென...
கேட்டவனுக்குத் தான் தெரியும்
காதில் விழுந்ததும் கெட்டதென...
விசாரித்தவனுக்குத் தான் தெரியும்
சூழலில் நடந்தது உண்மையென...
மணந்தவனுக்குத் தான் தெரியும்
மூக்கில் நுழைந்தது மல்லிகை மணமென...
பட்டவனுக்குத் தான் தெரியும்
காலில் சுட்டது நெருப்பென...
தொட்டவனுக்குத் தான் தெரியும்
கையில் பட்டது சுடுநீரென...
உணர்ந்தவனுக்குத் தான் தெரியும்
தோலைத் தீண்டுவது குளிரென...
இப்படி - நீ
பட்டறிந்ததை வைத்திருந்தால்
சட்டெனச் சொல்ல எழும்
உண்மையை
அப்படியே எழுதிவிடு
அதுவே
நல்ல பாவாக(கவிதையாக) அமைந்து விடுமே!
காளைக்குத் தெரிந்ததெல்லாம்
வாலையின் வண்ணங்களே...
வாலைக்குத் தெரிந்ததெல்லாம்
காளையின் எண்ணங்களே...
"காதலி...
காதலித்துத் தோல்விகாண்...
அப்ப தான்
பா (கவிதை) புனையலாம்" என்று
சிலர் பிதற்றலாம்...
அதெல்லாம்
ஒரு பக்க எழுத்தெல்லோ!
ஏன்?
இப்படி வாவேன் வழிக்கு...
பார்த்தவனுக்குத் தான் தெரியும்
கண்ணால் பார்த்ததும் கெட்டதென...
கேட்டவனுக்குத் தான் தெரியும்
காதில் விழுந்ததும் கெட்டதென...
விசாரித்தவனுக்குத் தான் தெரியும்
சூழலில் நடந்தது உண்மையென...
மணந்தவனுக்குத் தான் தெரியும்
மூக்கில் நுழைந்தது மல்லிகை மணமென...
பட்டவனுக்குத் தான் தெரியும்
காலில் சுட்டது நெருப்பென...
தொட்டவனுக்குத் தான் தெரியும்
கையில் பட்டது சுடுநீரென...
உணர்ந்தவனுக்குத் தான் தெரியும்
தோலைத் தீண்டுவது குளிரென...
இப்படி - நீ
பட்டறிந்ததை வைத்திருந்தால்
சட்டெனச் சொல்ல எழும்
உண்மையை
அப்படியே எழுதிவிடு
அதுவே
நல்ல பாவாக(கவிதையாக) அமைந்து விடுமே!
No comments:
Post a Comment
தங்கள் கருத்துகளை வரவேற்கிறேன்.
உங்கள் யாழ்பாவாணன்.