Monday, June 30, 2014
இன்னவைதான் கவி எழுத ஏற்றபொருள்
வலைச்சரம் ஆசிரியர் பொறுப்பை சிகரம் பாரதி ஏற்பதாகத் தெரிய வந்ததும் அவரது தளத்தைப் பார்க்க முடிந்தது.
"எல்லைகளுக்குட்பட்டு இயங்கக் கவிதை என்பது சிற்றோடை அல்ல" என்ற ஆய்வுக் கட்டுரையையும் அல்லவா படித்தேன்.
எனது நாட்டைச் சேர்ந்தவர் என்றதும் பாதி மகிழ்ச்சி, சிறந்த படைப்பாளி என்பதில் பாதி மகிழ்ச்சி, மொத்தத்தில் இப்பதிவு தந்த நிறைவில் முழு மகிழ்ச்சி!
பாபுனைய விரும்புவோருக்கு இப்பதிவு சிறந்த வழிகாட்டலாக இருக்கும் என்பதில் தங்களுடன் இதனைப் பகிர விரும்புகிறேன்.
"புதுக் கவிதையயன்று பார்க்கும்போது அதன் முன்னோடியாகத் தமிழில் மஹாகவி பாரதியையே குறிப்பிடுகிறோம்." என்றும் "கவிதை என்பது மன உணர்வுகளின் ஒரு வெளிப்பாடே. சில புனைவுகளைச் சேர்த்துச் சொல்வதால் அதற்கென ஒரு தனி நடையும் சிறப்பும் வழங்கப்பட்டிருக்கிறது. புனைவுகளின்றி ஒரு நயமின்றிச் சொல்லப்பட்டால் அது ஒருபோதும் சிறந்த கவிதையாக மாட்டாது." என்றும் அவர் கூறிய கருத்தை வரவேற்கிறேன்.
“இன்னவைதான் கவி எழுத
ஏற்றபொருள் என்று பிறர்
சொன்னவற்றை நீர் திருப்பிச்
சொல்லாதீர்! சோலை, கடல்
மின்னல், முகில், தென்றலினை
மறவுங்கள் மீந்திருக்கும்
இன்னல், உழைப்பு, ஏழ்மை, உயர்வு
என்பவற்றைப் பாடுங்கள்.” என
மஹாகவி கூறியிருப்பது பாடுபொருளின் உள்ளடக்க அமைவை வெளிப்படுத்தி நிற்கிறது. இது சிகரம் பாரதி எடுத்துக்காட்டிய பாடுபொருள் பற்றிய சான்று.
பாபுனைய விரும்புவோர் இவரது இப்பதிவைப் படிப்பதால் பாபுனையும் போது கருத்திற்கொள்ள வேண்டிய வழிகாட்டலைப் பெறலாம்.
கீழுள்ள இணைப்பைச் சொடுக்கிப் படியுங்கள்.
http://newsigaram.blogspot.com/2012/06/blog-post.html#.U7CrWfmSzbN
Subscribe to:
Post Comments (Atom)
அவரின் கருத்து வரவேற்கத்தக்கது ஐயா... அவருக்கும் வாழ்த்துக்கள்...
ReplyDeleteதங்கள் கருத்தை ஏற்றுக்கொள்கிறேன்
Deleteமிக்க நன்றி.
பூவின் மணத்திலும்,மூத்திரத்தின் நாற்றத்திலும் என கவிதை பிறக்கும் என்று பாப்லோ நெரூடா சொல்லி இருப்பது நினைவுபடுத்துகிறது உங்கள் பதிவு !
ReplyDeleteதங்கள் கருத்தை ஏற்றுக்கொள்கிறேன்
Deleteமிக்க நன்றி.
தங்களது பதிவைக் கண்டேன். நல்ல உத்திகளைத் தந்துள்ளீர்கள். நன்றி.
ReplyDeletewww.drbjambulingam.blogspot.in
www.ponnibuddha.blogspot.in
தங்கள் கருத்தை ஏற்றுக்கொள்கிறேன்
Deleteமிக்க நன்றி.
தங்கள் இந்த பதிவுக்கு மிக்க நன்றி !
ReplyDelete