Monday, July 7, 2014
கவிதை என்று எதைச் சொல்வது? - படியுங்க...
கவிதை என்று எதைச் சொல்வது?
அறிஞர் கும்மாச்சி அவர்கள் கேட்க
நான் படித்துச் சுவைத்துப் பார்க்க
விளங்கச் சொல்வது கவிதையா?
விளங்காத புதிர் செய்வதையா?
புரியாத புதிர் செய்வதா?
எளிய வார்த்தைக் கோர்வைகளா?
புரியும் மண்வாசக் கவிதைகளா?
புதுக் கவிதைகளா? இல்லை
கவிதை என்று எதை சொல்வது?
மென்மேலும் கேள்விகள் தொடர
ஆங்கோர் இடத்தில்
வாசகனின் எண்ண ஓட்டத்தில்
நிலைத்து நிற்கின்றவை தான்
கவிதை என்று அறிய முடிந்ததே!
பாபுனைய விரும்புவோர் அறிய - அவர்
பதிவுக்குக் கருத்துக் கூறிய
அறிஞர் கருத்தையும் படிக்க
கீழ்வரும் இணைப்பைச் சொடுக்குக!
http://www.kummacchionline.com/2010/02/blog-post_11.html
Subscribe to:
Post Comments (Atom)
நான் உங்கள் இணைப்பைக் கொடுக்க ,நீங்கள் கும்மாச்சியின் இணைப்பைக் கொடுக்க ....தொடரட்டும் நம் சக வலைத்தள உறவு !
ReplyDeleteநம் சக வலைத்தள உறவு தான்
Deleteபலமாக இருந்தால் தான்
நலமாகத் தமிழ் பேண உதவும்!
ஜீவலிங்கம் ஐயா மிக்க நன்றி எனது இணைப்பை கொடுத்ததற்கு. நீங்கள் சுட்டிக்காட்டிய எழுத்துப்பிழையும் சரி செய்யப்பட்டுவிட்டது. நன்றி.
ReplyDeleteபதிவர்களை உற்சாகப்படுத்துவதில் புதிய முறை (பகிர்வு)...
ReplyDeleteபாராட்டுக்கள் ஐயா...
//வாசகனின் எண்ண ஓட்டத்தில்
ReplyDeleteநிலைத்து நிற்கின்றவை தான்
கவிதை என்று அறிய முடிந்ததே!// நன்று
கும்மாச்சி அவர்களின் பதிவைப் படித்துவிட்டு வந்தேன், அருமை..பகிர்விற்கு நன்றி ஐயா