Friday, July 11, 2014

எது கவிதை என்று படித்தாலென்ன?

"அவள் அடித்த அடி
இன்னமும் இப்பவும்
வலிக்கிறதே!" என்றும்
"அவனுக்கென்ன
அடுத்தவளோடு தொடருவான்
நானல்லவா அழுகிறேன்!" என்றும்
பாப்புனைந்தால்
பாவலனாகிவிடலாமா?
எழுத்து, அசை, சீர், அடி, தொடை, பா எனவும்
பாடுபொருள், உவமை, எதுகை, மோனை எனவும்
எடுத்துச் சொன்னால் - அவை
மரபுக் கவிதைக்காரருக்குத் தான்
புதுக் கவிதைக்காரருக்கு இல்லை என்பீர்...
தொல்லை எதற்கு என்று
அறிஞர் நா.முத்துநிலவன் அவர்களின்
"புதுக்கவிதை-வெற்றிபெற்ற
வரலாற்றுச் சுருக்கம்" என்ற பதிவை
தங்களுடன் பகிர விரும்புகிறேன்!
பாப்புனைய விரும்பும்
எல்லோரும்
கீழுள்ள இணைப்பைச் சொடுக்கி
பாவலர் பலரது எண்ணங்களில் தோன்றியதை
பாவலர் நா.முத்துநிலவன் தரும்
புதுக் கவிதை பற்றிய பாடம் என்று
கற்றுக்கொள்ள முன்வாருங்கள்!

http://valarumkavithai.blogspot.com/2014/07/blog-post_11.html

10 comments:

  1. எழுத்து, அசை, சீர், அடி, தொடை,
    பாடுபொருள், உவமை, எதுகை, மோனை..இதை எல்லாம் சேர்ந்ததுதான் கவிதை என்றால் ,இன்று இருக்கும் கவிஞர்களை விரல் விட்டு எண்ணி விடலாம் !

    ReplyDelete
    Replies
    1. உண்மைதான்...இவையெல்லாம் வைத்து எழுதினால்தான் தான் வித்தியாசமாய்ப் பார்க்கின்றனர் சாதாரண மக்கள் :)

      Delete
    2. பகவான்ஜி அவர்களே!
      உண்மை தான்...
      மனிதனுக்கு மனித உறுப்புகள் போல
      கவிதைக்குக் கவிதை உறுப்புகள் தேவை
      மிக்க நன்றி!

      Delete
    3. தேன்மதுரத்தமிழ் கிரேஸ் அவர்களே!
      உண்மை தான்...
      இவையெல்லாம் இருந்தால் கவிதை நடையில் மாற்றம் உண்டு. அதனை வைத்து சாதாரண மக்கள் வித்தியாசமாய்ப் பார்க்கின்றனர்!

      Delete
  2. சிறப்பாக பகிர்ந்துள்ளார் ஐயா... அவருக்கும் வாழ்த்துக்கள் + நன்றிகள்...

    ReplyDelete
    Replies
    1. தங்கள் கருத்தை ஏற்றுக்கொள்கிறேன்
      மிக்க நன்றி.

      Delete
  3. பொதுவாக இந்தப் பெருந்தன்மை எல்லாருக்கும் வராது.
    தங்களின் அன்புக்கு எனது தலைதாழ்ந்த நன்றிகலந்த வணக்கம் நண்பரே.

    ReplyDelete
    Replies
    1. ஓர் அறிஞரின் அறிவை அனைவரும் அறிய அறிமுகம் செய்வதை விரும்புகிறேன். அதாவது, எனது வலைப்பூ வாசகர்கள் எந்தவொரு அறிஞரின் அறிவையும் பெற்றுக்கொள்ள உதவுவதே எனது பணி.
      மிக்க நன்றி ஐயா!

      Delete
  4. மிக்க நன்றி சகோ! இதோ இப்பவே சென்று பார்க்கிறேன். வாழ்த்துக்கள் .....!

    ReplyDelete
    Replies
    1. தங்கள் கருத்தை ஏற்றுக்கொள்கிறேன்
      மிக்க நன்றி.

      Delete

தங்கள் கருத்துகளை வரவேற்கிறேன்.
உங்கள் யாழ்பாவாணன்.