Thursday, June 26, 2014

புதுக்கவிதை எழுத முன்...

கவிதை என்பது
எண்ணங்களைக் கொட்டிவிட்டால் ஆகாது...
வரிக் (வசன) கவிதைக்கு
பாரதியின் 'குயில் பாட்டு' படியுங்கள்...
புதுக்கவிதைக்கு
மூ.மேத்தாவின் 'கண்ணீர்ப் பூக்கள்' படியுங்கள்...
மரபுக் கவிதைக்கு
கண்ணதாசன் பாடல்களைப் படியுங்களென
எடுத்துச் சொல்ல ஏது உண்மை?
பாக்கள் (கவிதைகள்), பாடல்கள் எல்லாம்
இலக்கண உடை உடுத்தால் தான்
உயிர் ஊட்டப்பட்டிருக்குமே!
அரும்புகள் மலரட்டும் தளத்தில்
"புதுக்கவிதையின் வடிவம்- ஓர் ஆய்வு" என்ற
பதிவைப் படித்த பின்
பாப்புனைய விரும்புவோருக்கு
நல்ல பாடமாக இருக்குமென்றே எண்ணி
என் உள்ளம் நிறைவோடு
உங்களுடன் பகிர விரும்புகிறேன்!
கட்டுரை வரிகளை உடைத்துப் போட்டு
ஆக்குவது புதுக்கவிதை அல்ல...
புதுக்கவிதைக்கும்
படிமங்கள், வடிவங்கள் எனப் பலவுண்டு...
புதுக்கவிதை எழுத முன்
கீழுள்ள இணைப்பைச் சொடுக்கிப் படியுங்களேன்!

http://pandianpandi.blogspot.com/2013/08/blog-post_25.html

11 comments:

  1. உண்மை ஐயா..சகோதரர் பாண்டியனின் இப்பதிவைப் படித்ததில்லையே..பகிர்விற்கு நன்றி ஐயா. படித்து என் எழுத்தைக் கொஞ்சம் மதிப்பிட்டுக் கொள்கிறேன்.

    ReplyDelete
  2. நன்றி சகோ பதிவிற்கு இதோ சென்று பார்க்கிறேன். வாழ்த்துக்கள் ...!
    ஆமா கேள்வி பதில் என்னாயிற்று தாங்களும் அல்லவா அகப்பட்டுக் கொண்டீர்கள். அன்பு வலைக்குள்.

    ReplyDelete
    Replies
    1. தங்கள் கருத்தை ஏற்றுக்கொள்கிறேன்
      மிக்க நன்றி.

      இப்படி ஒரு கேள்வி கேட்டால் உங்கள் பதில் என்ன?
      http://eluththugal.blogspot.com/2014/06/blog-post_8953.html

      Delete
  3. வணக்கம் ஐயா
    எனது பதிவைப் பகிர்ந்து கொண்ட தங்கள் மேலான குணம் கொண்டு மிக்க மகிழ்ச்சியடைகிறேன். தங்கள் தமிழ்ப்பணி தொடரட்டும் ஐயா. நம் நட்பும் என்றும் நிலைக்கட்டும். ரொம்ப நன்றீங்க ஐயா..

    ReplyDelete
    Replies
    1. பாப்புனைய விரும்புவோருக்கு
      நல்ல பாடமாக இருக்குமென்றே எண்ணியே
      தங்கள் பதிவைப் பகிர்ந்தேன்!
      எங்கள் நட்பு என்றும் தொடரும்!

      Delete
  4. வணக்கம் ஐயா
    புதுக்கவிதையை எவ்வளவு எளிதாக ஒரு கட்டமைப்பில் அடக்கி விட முடியாது. அது பரந்து விரிந்தது. இருப்பினும் குறிப்பிட்ட தலைப்புகளில் அடக்கிப் பதிவிட்டு விட்டேன். இதனால் மற்றவர்கள் பயனடைவார்கள் என்றால் அதை விட என்ன மகிழ்ச்சி வேண்டும் ஐயா. பகிர்ந்து கொண்ட தங்களுக்கு என் அன்பான நன்றிகள்.

    ReplyDelete
    Replies
    1. குறிப்பிட்ட தலைப்புகளில் புதுக்கவிதையை அடக்கிப் பதிவிட்டதாகக் கருதமுடியாது. பாப்புனைய விரும்புவோர் தங்கள் எடுத்துக்காட்டை ஒரு கருவியாகப் பாவிக்கலாம். கட்டுரை வரிகளை உடைத்துப் போட்டுப் புதுக்கவிதை ஆக்குவதை விட, தாங்கள் சுட்டிக்காட்டிய வடிவங்களில் புதுக்கவிதை ஆக்கினால் தரமானதாக இருக்கும். இவ்வடிவங்களில் பயிற்சி பெற்றவர் புதிய வடிவங்களைக் கையாள முனையலாம். அதனால், அவர்கள் சிறந்த பாவலர் / கவிஞர் ஆகலாம்.

      Delete
  5. நல்ல வழிகாட்டல் !

    ReplyDelete
    Replies
    1. தங்கள் கருத்தை ஏற்றுக்கொள்கிறேன்
      மிக்க நன்றி.

      Delete
  6. அய்யா,
    வணக்கம். கற்றுக்கொள்வதற்கு நிறைய இருப்பதை இணையத்திணைந்து கற்றுவரும் இந்நாட்களில் பாப்புனைய வாருங்கள் என்னும் தங்கள் தளத்தில் மாணவப் பார்வையாளனாய்ச் சேர்வதில் மிகுந்த மகிழ்ச்சியடைகிறேன்.

    ReplyDelete
    Replies
    1. ஐயா! இப்ப தான் தங்கள் தளத்தைப் பார்த்துத் திரும்பினேன்! தாங்கள் மரபுக் கவிதையில் புலி என்பதைப் படித்தேன். வருகைக்கும் கருத்துக்கும் மிக்க நன்றி. தங்கள் அவையடக்கத்திற்குப் பணிகின்றேன். நான் தங்கள் மாணவராகவே இருக்க விரும்புகிறேன்.

      Delete

தங்கள் கருத்துகளை வரவேற்கிறேன்.
உங்கள் யாழ்பாவாணன்.