Saturday, May 23, 2015

இலக்கணம் அறிந்து எழுதுகோல் ஏந்து


"நான் என்ன
என்னைக் காதலி என்று தானே கேட்டேன்!
அதற்கு - நீ
என் கன்னம் சிவந்து வீங்க
காலணியால் அடிப்பாயா?" என்று ஆணெழுத
"நானாவது
கன்னம் சிவந்து வீங்க
காலணியால் அடித்தேன்! - என்
கணவன் அருகில் இருந்திருந்தால்
என்னைக் காதலி என்று கேட்டதுமே
என் மனைவியிடமா கேட்கின்றாய் என்று - உன்
கழுத்தையே அறுத்திருப்பாரே!" என்று பெண் பதிலிறுக்க
அழகான பா/கவிதை என்று படித்தவர் புகழ
மிச்சம் சொல்லவும் வேண்டுமா? - தன்னை
பாவலரென்றே முழங்கித் திரிவர் சிறியர்!
இலக்கியம் தோன்றிய பின்னரே
இலக்கணம் தோன்றியது என்பதை
கணக்கில் வைத்துக்கொண்டு - எவரும்
கதை, கட்டுரை, நாடகம் எழுதினாலும்
பா/கவிதை, இசைப்பாட்டு, திரைப்பாடல் எழுத
இயலாதென்பதை எள்ளளவேனும் அறிந்தீரா?
எழுத்து, அசை, சீர், தளை,
பிணை, அடி, தொடை,
பா, பாவினம் என ஒன்பது
உறுப்புகள் கொண்ட தொகுப்பே
பாவிலக்கணம் என்றுரைக்கிறார்
"யாப்பரங்கம்" நூலாசிரியர்
புலவர் வெற்றியழகன்! - இங்கே
தமிழில் 30 + 1 எழுத்துகளா
தமிழில் 247 எழுத்துகளா
என்றெல்லோ மோதுகினம்!
"உன்கண்ணில் நீர்வழிந்தால் -- என்னெஞ்சில்
   உதிரங் கொட்டு தடீ;" என்பது
காதல் கவிதையா? குழந்தைக் கவிதையா?
என்றெல்லோ மோதுகினம்!
பாரதி பாடலும் நன்னூல் அறிவும்
எள்ளளவேனும் அறிந்திருந்தால் கூட
பா/கவிதை புனையலாம் காண் - நீ
பாப்புனைய விரும்பும் ஒருவரா - அப்ப
பா/கவிதை ஒன்றைக் கண்டால்
படித்துப் பாடுபொருள் கண்டுபிடி - மேலும்
பவணந்தி முனிவர் எழுதிய நன்னூலில்
தமிழில் 369 எழுத்துகள் உண்டாம் - நான்
கண்டேன் ஊமைக்கனவுகள் தளத்தில் - பாரும்
பாப்புனைய விரும்பும் எல்லோருக்கும் ஏற்ற
இலக்கண ஆய்வுப்பாடம் ஆங்கே இருக்கே!
இழுத்தடிப்பு வேண்டாம் இப்பவே செல்லங்கே
கீழுள்ள இணைப்பைச் சொடுக்கியே படித்தங்கே
http://oomaikkanavugal.blogspot.com/2015/04/blog-post_24.html
இலக்கணம் அறிந்து தெளிந்த பின்
எழுதுகோல் ஏந்து இலகுவாய்ப் பாப்புனையலாம்!


6 comments:

  1. பலரும் அறிவார்கள்... ஊமைக்கனவுகள் தள அறிமுகத்திற்கு நன்றி...

    ReplyDelete
    Replies
    1. தாங்கள் சொல்வது போல
      ஊமைக்கனவுகள் தளத்தை பலரும் அறிவார்கள்
      அவரது காரம் சாரமான இலக்கண ஆய்வுப் பதிவினை எனது வாசகர்களும் தெரிந்துகொண்டால் பயனுண்டு என்பதால் அவரது பதிவினைப் படிக்குமாறு இப்பதிவினூடாகத் தெரியப்படுத்தியுள்ளேன். மிக்க நன்றி!

      Delete
  2. வணக்கம்
    அருமையான விளக்கம் பகிர்வுக்கு நன்றி
    -நன்றி-
    -அன்புடன்-
    -ரூபன்-

    ReplyDelete
    Replies
    1. தங்கள் கருத்தை ஏற்றுக்கொள்கிறேன்
      மிக்க நன்றி.

      Delete
  3. தங்கள் விளக்கம் அருமை....பா எழுத...

    ஊமைக்கனவுகள் விஜு ஆசானின் தளத்தினை அடையாளப் படுத்தியமைக்கு மிக்க நன்றி!

    ReplyDelete
    Replies
    1. தங்கள் கருத்தை ஏற்றுக்கொள்கிறேன்.
      மிக்க நன்றி.

      Delete

தங்கள் கருத்துகளை வரவேற்கிறேன்.
உங்கள் யாழ்பாவாணன்.