Friday, October 31, 2014

சுவையான பாக்களை படித்தால்...


"பசுபதிவுகள்" என்ற
வலைப்பூ (Blog) ஆசிரியரும்
"கவிதை இயற்றிக் கலக்கு!" என்ற
நூலின் ஆசிரியரும்
"கவிதை எனக்கோர் ஆனந்தம்!" என்ற
தலைப்பில் ஓர் இனிய பா தந்து
எப்படிப் பா புனைகிறார் என
எமக்கு விரித்து உரைக்கிறார்
படித்துப் பாருங்களேன்!

"வண்ணப் புனைவும் உணர்ச்சியையும்
 மண்டை முழுதும் தேடிடுவேன்;" என்றும்
"புனைவும் உணர்வும் இசைபாடும்;
 புதிய மயக்கம் ஆழ்த்திடுமக்
கனவின் விளிம்பில் உதிக்குமொரு
கவிதை எனக்கோர் ஆனந்தம்!" என்றும்
பாவலர் பசுபதி கூறும் வழிகாட்டலை
பாப்புனைய விரும்புவோர் என்றும்
பாப்புனைகையிலே எண்ணிக்கொள்ளும்!

பாப்புனைய விரும்புவோர் - பலரது
சுவையான பாக்களை படித்தால்
பாப்புனைந்தவரின் கைவண்ணம் - அவர்
கையாளும் பாவண்ணம் எல்லாம்
உள்ளத்தில் இருத்திக் கொள்ளலாமே!
"கவிதை எனக்கோர் ஆனந்தம்!" என்ற
பாவலர் பசுபதியின் கவிதையை
கீழ்வரும் இணைப்பைச் சொடுக்கியே
படித்துச் சுவைக்கலாம் வாருங்கள்!
http://s-pasupathy.blogspot.com/2014/10/blog-post.html

8 comments:

  1. தங்கள் கருத்தை ஏற்றுக்கொள்கிறேன்
    மிக்க நன்றி.

    ReplyDelete
  2. உரை நடைகளில் நீண்டு எழுதுவதைவிட கவிதை எழுவதுதான் சீக்கிரமாய் முடிந்துவிடுகிறது என்பதாக சொல்கிறார்கள். அது உண்மைதான் போலிருக்கிறது.

    ReplyDelete
    Replies
    1. உரை நடைகளில் நீண்டு எழுதுவதை விட
      கவிதை எழுதுவது தான் சீக்கிரமாய் முடிந்துவிடுகிறது
      என்பதாகச் சொல்கிறார்களா...
      இருக்கலாம்...
      ஆனால்
      கவிதை எழுதுவது தான்
      சிறிதாக இருப்பினும்
      புரிந்துகொள்ளச் சற்று அறிவு வேண்டும்
      உரை நடை நீண்டு இருப்பினும்
      எல்லோரும்
      எளிதில் புரிந்துகொள்வரே...
      என்றாலும் கூட
      எல்லோரும் புரிந்து கொள்ள
      பாரதியின் பாக்களே உதவின...

      Delete
  3. வணக்கம் ஐயா!

    உங்கள் அருமையான இப்பணி மிகச் சிறப்பு!
    பசுபதி ஐயாவின் வலைத்தளம் இன்றுதான் கண்டேன் உங்களால்!
    மிக சிறப்பு!..
    அறியத் தந்தமைக்கு உளமார்ந்த நன்றியுடன் வாழ்த்துக்கள் ஐயா!

    ReplyDelete
  4. அறிய விளக்கம் அறிந்திடத்தந்தீர்!
    நன்றி!

    ReplyDelete
    Replies
    1. தங்கள் கருத்தை ஏற்றுக்கொள்கிறேன்
      மிக்க நன்றி.

      Delete
  5. ''கவிதை எனக்கோர் ஆனந்தம்!"பசுபதிஅய்யாவின் ஆனந்தத்தில் பங்கு கொண்டு நானும் மகிழ்கிறேன் !

    ReplyDelete
    Replies
    1. தங்கள் கருத்தை ஏற்றுக்கொள்கிறேன்
      மிக்க நன்றி.

      Delete

தங்கள் கருத்துகளை வரவேற்கிறேன்.
உங்கள் யாழ்பாவாணன்.