கிழக்கு மேற்குப் பார்ப்பதில்லை
வடக்கும் தெற்கும் தெரிவதில்லை
இருக்கை இருந்தால் போதுமென
முண்டியடித்து
முன்னே ஏறிய பின்னர்
ஆளுக்காள்
முணுமுணுக்கத் தான் தெரியுமே!
இடப் பக்க இருக்கை
குளு குளு காற்றடிக்க
வெயில் பிடிக்காத இடமாச்சே
முணுமுணுத்தார் ஒருவர்...
இருக்கை என இருக்க வந்தாச்சு
வெயிலென்ன காற்றென்ன
முகம் வாட்டும்
வெயில் பக்கமாய் இருந்தவர்
அழுவாரப்போல முணுமுணுத்தார்...
உள்ளே போங்கோ உள்ளே போங்கோ என
நடத்துநரும்
ஆட்களை அடுக்கி ஏற்றினாரே!
ஓட்டுநரும்
பேரூந்தை உருட்டி நகர்த்தினார்
முன், இடம், வலம் என
பேரூந்தும் நகர
பேரூந்துக்குள்ளே மீண்டும்
முணுமுணுப்பு வலுத்தது...
வெயில் பக்கமாய் இருந்தவருக்கு
சில்லெனக் குளிர் காற்றும்
நல்ல நிழல் காய
மகிழ்ந்து முணுமுணுக்க...
நிழலும் காற்றும் சுகமாயிருக்க
மகிழ்ந்தவருக்கு
முகத்திலடிக்கும் வெயில் காற்று
துன்பம் தருவதாய் முணுமுணுக்க...
நடுவே நசிபவர்கள்
இவ்வளவு தூரம் வந்தாச்சு
இன்னும் எவரும்
இறங்குவதாயில்லை என
அலுத்துக்கொள்ள பேரூந்தும் நகர்ந்ததே!
சிறிது தூரம் பேரூந்து நகரவே
பெரும் மாற்றங்களைக் காணும்
நம்மாளுகளே
இருக்கை இருந்தால் போதுமென
முன்னேறுகையில்
பின்னே வரும் துயரை
நினைக்க மறப்பது சரியா?
ஒரு வெயில் ஒரு காற்று
நான்கு பக்கங்கள்
இவை ஆறும் தெரியாதா உமக்கு?
பேரூந்துக்குள்ளே
முணுமுணுக்க முன்னே
முன்னேற்பாடாய் இருந்தவர்
(துன்பம் களித்தவர் மகிழ்வடைய)
நலமாகப் பயணம் செய்கிறாரே!
இதைப் பார்த்த எனக்கு
"பட்டபின்னே அறிவதை விட
படமுன்னே அறிவதே
அறிவு!" என்றும்
"தேவை ஏற்படாத வரை
இப்படியும்
நிகழுமென உணராத வரை
பின்விளைவை அறியாத வரை
சிந்திக்காத நம்மாளுகள்;
வெயில் சுட்ட போதும்
காற்றின் இசை கேட்ட போதும்
'பட்டால் தானே தெரிகிறது
சுட்டது நெருப்பு என்று' என
பாடிக்கொண்டே சிந்திக்கிறார்களே!" என்றும்
பல கவிதைகள் எழுதத் தோன்றிற்று!
நடைமுறையில் எல்லோரும் சந்திக்கும் விடயமாச்சே
ReplyDeleteஉண்மை தான்
Deleteஆயினும்
சிந்திக்கச் சிலவரிகள் உண்டு.
/// பட்டபின்னே அறிவதை விட படமுன்னே அறிவதே
ReplyDeleteஅறிவு... ///
நன்றாகச் சொன்னீர்கள்... வாழ்த்துக்கள் ஐயா...
தங்கள் கருத்தை ஏற்றுக் கொள்கிறேன்.
Deleteநடைமுறைக் கவிதை...
ReplyDeleteசூழலில் காணும் நிகழ்வு தான்...
Delete