பா (கவிதை) அல்ல - வெறும்
பா (கவிதை) நடையே - அதை
படியெடுத்தால் பாவாக்க (கவிதையாக்க) முடியாதே!
புதிதாய்ப் பாப்புனைய (கவிதையாக்க) விரும்புவோர்
புதுப்பா (புதுக்கவிதை) புனைய (ஆக்க) விரும்புவோர்
பாவலர் மூ.மேத்தா அவர்களின்
கண்ணீர்ப் பூக்களைப் படிக்கலாம்...
பாவலர் வைரமுத்து அவர்களின்
கவிராஜன் கதை படிக்கலாம்...
படித்துச் சுவைத்ததைப் பகிராமலே
படித்துச் சுவைத்ததைப் போலவே
பாப்புனையத் (கவிதையாக்கத்) தான் முயன்றாலும்
பாப்புனைய (கவிதையாக்க) எண்ணமிடல் (கற்பனை) வேண்டுமே!
கால்களை மேயும் கண்களால் கண்டதை
மீளவும் உள்ளக் கண்ணால் பார்த்தே
எண்ணமிட்டுப் (கற்பனை செய்து) பாரும்...
"வாலை ஒருவள் வந்த வழியைப் பாரேன்
காலைத் தூக்கி வைத்து நடப்பதைப் பாரேன்
வைத்த கால்ப் பெருவிரலின் போக்கைப் பாரேன்
நேர்கோடு ஒன்றில் பயணிப்பதைப் பாரேன்
நடைபயிலும் வாலையின் சுடும்காலைப் பாரேன்
சித்திரை வெயிற்றரை வாட்டுவதைப் பாரேன்" என்று
ஆண் பாவலர் எண்ணமிட்டு (கற்பனை செய்து) எழுதலாமே!
"கால்நடைகள் நடக்கும் வீச்சுநடை போல
வீசும்காற்றுக்குத் தள்ளாடும் கமுகு போல
கண்முன்னே மண்விழுவான் நெழிவார் போல
வழியெதிரே ஆடியாடி விழுவார் போல
விழிமங்கக் குடித்தவர் வழியிலே வீழவே
வந்தகாற்று உடைபிடுங்க ஆளோ அம்மணம்!" என்று
பெண் பாவலர் எண்ணமிட்டு (கற்பனை செய்து) எழுதலாமே!
முகம் பார்க்கும் கண்ணாடியிலே கொஞ்சம் - தங்கள்
மூஞ்சியைப் பார்த்தால் பாப்புனைய முடியாதாம்
தெருவால போறவங்க மூஞ்சியைப் பார்த்தே
எத்தனை எத்தனை பாப்புனையலாம் பாரும்...
"செக்கச் சிவந்த பொட்டு இட்டவளே
கழுத்திலே மின்னும் கொடி போட்டவளே
கிட்ட வந்தவேளை கண்டுகொண்டேன் - உன்னை
எட்ட விலத்தி நடக்கிறேன் என்னவளைத் தேடி" என்று
ஆண் பாவலர் எண்ணமிட்டு (கற்பனை செய்து) எழுதலாமே!
"திறந்த சட்டைக்குள்ளே தெரிவது தங்கச்சங்கிலி
தலையை வாரிவிடும் கையிலே மின்னுவது மோதிரம்
எல்லாமே தங்கப்பூச்சோ வாடகையோ - உன்
நடிப்பைக் கண்டு நானும் விலகினேனே - என்
தங்கமான என்னவனைத் தேடியே" என்று
பெண் பாவலர் எண்ணமிட்டு (கற்பனை செய்து) எழுதலாமே!
"நெஞ்சிலே தெரிவது எலும்பும் தோலுமே" என்று
கண்ணுக்கு எட்டிய ஆணைப் பார்த்தும்
"நெஞ்சிலே தெரிவது நீர்வீழும் வீழ்ச்சியோ" என்று
கண்ணுக்கு எட்டிய பெண்ணைப் பார்த்தும்
வயிற்றுக்கு மேலேமேயும் விண்ணர்கள் எழுதலாம்!
"நெடுநாள் அடக்கம் எவளை முடக்குமோ" என்று
எட்டி நடைபோடும் ஆணைப் பார்த்தும்
"நெடுநாள் முடக்கம் என்றோ அம்மாவாக்கவே" என்று
எட்டி நடைபோடும் பெண்ணைப் பார்த்தும்
வயிற்றுக்குக் கீழேமேயும் விண்ணர்கள் எழுதலாம்!
வழியிலே கண்டவர் வயிற்றைப் பார்த்து
வழியிலே நின்றவர் பேச்சைக் கேட்டு
பாப்புனைதல் (கவிதையாக்கல்) என்ற மலையின்
அடியில் ஊரும் எறும்பாகிய நாமும்
துளிப்பா (கைக்கூ) ஆயினும் புனைய முடியாதோ?
"அக்காவின் நிறைமாத வயிற்றைப் போல
தப்பாமல் நீண்டு மின்னும் வயிறானவள்
நமக்கு ஆகாதவள் ஆச்சே!" என்று
ஆண் பாவலர் எண்ணமிட்டு (கற்பனை செய்து) எழுதலாமே!
"அக்காவின் நிறைமாத வயிற்றைப் போல
நீண்டு மின்னும் குடிகாரன் வயிறாச்சே
நமக்கு ஆகாதவன் ஆனானே!" என்று
பெண் பாவலர் எண்ணமிட்டு (கற்பனை செய்து) எழுதலாமே!
கல்லெறியோ சொல்லடியோ விழுந்தாலும் - நீ
மேலேமேய்வதையோ கீழேமேய்வதையோ விட்டிட்டு
நாட்டுக்கு நல்ல செய்தி சொல்ல - உன்
பாட்டுக்குச் சொல்லெடுத்து அடியமைத்து
பாப்புனைய (கவிதையாக்க) விரும்புங்கள் உறவுகளே!
பேச்சளவில் பாவலர் என்றெவர் சொன்னாலும்
எழுத்தளவில் எண்ணமிடலை (கற்பனையை) வைத்தே உணரலாம்
பாப்புனைய விரும்பும் உறவுகளே! - கொஞ்சம்
எண்ணமிடலை (கற்பனையை) வளப்படுத்தினால் பாரும்
பாவலராக வேறென்ன தகுதிவேண்டும் உமக்கு!
பா புனைய பல வழிகள் இருக்கு இயல்பாக என்பதை அழகாய் சொல்லியிருக்கின்றீங்க ஐயா.
ReplyDeleteதங்கள் கருத்தை ஏற்றுக்கொள்கிறேன்
Deleteமிக்க நன்றி.
மிக சுவையாக உள்ளது எழுதியது சகோதரா.
ReplyDeleteதங்கள் கருத்தை ஏற்றுக்கொள்கிறேன்
Deleteமிக்க நன்றி.
நல்லதொரு நடையழகு கவி
ReplyDeleteநல்ல யோசனை
ReplyDeleteஇனிமையான ஆலோசனைகள்... வாழ்த்துக்கள் ஐயா...
ReplyDeleteதங்கள் கருத்தை ஏற்றுக்கொள்கிறேன்.
Deleteமிக்க நன்றி.
நல்ல ஆலோசனைகள் வாழ்த்துக்கள் ..!
ReplyDeleteதங்கள் கருத்தை ஏற்றுக்கொள்கிறேன்.
Deleteமிக்க நன்றி.
பாப்புனைய விரும்பும் உறவுகளே! - கொஞ்சம்
ReplyDeleteஎண்ணமிடலை (கற்பனையை) வளப்படுத்தினால் பாரும்
பாவலராக வேறென்ன தகுதிவேண்டும் ....கற்பனைக்கு பஞ்சம் ஏற்பபட்டதாக தெரியவில்லை...????
தங்கள் கருத்தை ஏற்றுக்கொள்கிறேன்.
Deleteமிக்க நன்றி.
வணக்கம்
ReplyDeleteநல்ல வழிகாட்டல்.... பகிர்வுக்கு நன்றி. அண்ணா த.ம1
-நன்றி-
-அன்புடன்-
-ரூபன்-
தங்கள் கருத்தை ஏற்றுக்கொள்கிறேன்.
Deleteமிக்க நன்றி.