Monday, November 10, 2014

யாப்புச் சூக்குமம் படித்துப் பாருங்களேன்!

அறிஞர் ஜோசப் விஜூ அவர்களின்
ஊமைக்கனவுகள் தளம் பார்த்தீர்களா?
யாப்புச் சூக்குமம் முதற் பகுதியில்
அசை, சீர் பற்றிய விரிப்புத் தான்...
அழகாய் ஐந்து குறளைத் தந்தார்
அசை, சீர் பிரித்து அலகிட்டால்
அடுத்த பதிவில் - உங்களை
வெண்பா எழுத வைத்துவிடுவேன் என்றாரே!
நானும் படி, படியென்று படித்த பின்
அடுத்த பதிவிற்குள் தலையை ஓட்டினேன்...
விதி கூறிச் சொற்களைக் கூறிடுதல்,
எழுத்துக்களின் எண்ணிக்கையைக் கணக்கிடுதல்,
அடி வரையறை தொட்டு அப்பால்
வெண்பா, இலக்கண நுட்பங்கள் கூறியே
புலவர் வெண்பா புனைய வைத்துவிடுகிறாரே!
வெண்பா புனைய வைத்த புலவர்
உண்மையில் தானெழுதிய தேர்வாக - எம்
கற்றலில் முதிர்ச்சியை (தெளிவை/ நிறைவை) ஏற்படுத்தவே
'வெண்பாவில் பட்ட விழுப்புண்கள்' என்றொரு
பதிவைப் பாரென ஈற்றில் பகிர்ந்தாரே!

பாபுனைய விரும்பும் உள்ளங்களே!
யாப்பறிந்து வெண்பாப் புனைய
ஊமைக்கனவுகள் பக்கம் வாருங்கள்...
யாப்புச் சூக்குமம் - 01 இல்
http://oomaikkanavugal.blogspot.com/2014/11/blog-post.html
புகைவண்டியில் செல்லும் யாப்பிலக்கணம் படித்தேன்
அதுவென் உள்ளத்தில் ஊருதே என்றிருக்க
யாப்புச் சூக்குமம் - 02 இல்
http://oomaikkanavugal.blogspot.com/2014/11/ii.html
புகைவண்டியால இறங்கியதும் தொடங்கினாரே
வெண்பா இலக்கணம் இதுவென உரைத்தாரே!
'வெண்பாவில் பட்ட விழுப்புண்கள்' இல்
http://oomaikkanavugal.blogspot.com/2014/11/blog-post_13.html
"தளை தவறினால் யாரும் - உங்கள்
தலையை எடுத்துவிடப் போவதில்லை.
தவறை இனம் காணப் பழகுங்கள்." என்ற
வழிகாட்டலைப் பட்டறிவோடு கலந்து
வெண்பாப் புனைகையில் கற்றுத்தேறென
முதிர்ச்சியை (தெளிவை/ நிறைவை) ஏற்படுத்துகிறாரே!
யாப்புச் சூக்குமம்-III இல்
http://oomaikkanavugal.blogspot.com/2014/12/iii.html
விருத்தத்தின் எலும்புக்கூடு என
விருத்தத்தின் கட்டமைப்பு
எப்படி இருக்குமெனப் பாருங்களென
ஆசிரியப்பாவை விளக்குகிறாரே!
யாப்புச் சூக்குமம் IV இல்
http://oomaikkanavugal.blogspot.com/2015/01/iv.html
விருத்தத் தூண்டில் என்ற தலைப்பின் கீழ்
"மரபுக் கவிதைகளில்
ஒரு பாடலின் சந்தம்
உங்களைக் கவருகிறது என்றால்
அதனை
இப்படிப் பிரித்துப் பார்த்துவிட்டீர்கள் என்றால்
அதன் வடிவம் உங்களுக்குப் புலப்பட்டுவிடும்.
பின்பு அந்த வடிவத்திற்கு
நீங்கள் உயிர் கொடுக்கலாம்." என வழிகாட்டி
யாப்புச் சூக்குமம் தொடரை முடித்து வைக்கின்றாரே!

அங்கே போய் - நன்றே
வெண்பா புனையக் கற்றபின்
பண்ணோடு பாபுனைந்து - நீங்களும்
செந்தமிழைப் புகழ்ந்து பாடுங்களேன்!

10 comments:

  1. படித்துவிட்டு.என் கருத்துரையையும் பதிவிட்டேன. அய்யா...........

    ReplyDelete
    Replies
    1. தங்கள் கருத்தை ஏற்றுக்கொள்கிறேன்
      மிக்க நன்றி.

      Delete
  2. நல்லத் தகவலுக்கு நன்றி .நானும் படிக்கிறேன்

    ReplyDelete
  3. என்னையு மோர்பொருட்டாய் எந்தமிழ் நல்லுறவால்
    பின்னும் எடுத்திட்டீர் பேர்விளங்க - அன்னையவள்
    மக்கள்நாம் என்போம் மதிவிளக்கும் எக்கதிரும்
    திக்கறுத் தாகும் துணை

    தங்களின் பகிர்விற்கு நன்றி அய்யா!

    ReplyDelete
    Replies
    1. சுவையோடு செந்தமிழில் பாப்புனைய
      எவையேனும் ஐயமிருப்பின் கேட்டறிக
      இவையென் நெஞ்சில் தைத்திட
      நானுமிங்கே பகிர்ந்தேன் தம்பதிவை!

      Delete
  4. ஆழ்தமிழை ஆண்டுவரும் ஆண்டைகளின் வேரறுத்து
    யாழ்ப்பாவா ணர்செய்யும் இப்பணிகள் - வீழுமெனுந்
    சொல்கடியும்! செந்தமிழின் சீர்காக்கும்!! எப்போதும்
    வெல்காசி ராஜலிங்கர் வாக்கு!

    நன்றி அய்யா!

    ReplyDelete
    Replies
    1. நானும் நீங்களும் தமிழ்த்தாய் ஈன்ற
      தமிழ்ப் பிள்ளைகள் என்றாலும் கூட
      நாம் உலகெங்கும் தமிழைப் புகட்டியே
      தமிழை உலகம் படிக்க வைக்க
      ஒன்றாய் பயணிப்போம்!

      Delete
  5. அவருடைய தளத்தை நானும் தொடர்கிறேன் !

    ReplyDelete
  6. எனது அருமை நண்பர்/அவர் தம் குடும்பத்தினர்,
    அனைவருக்கும் மனங் கனிந்த இனிய இறையருள்மிக்க,

    "புத்தாண்டு நல் வாழ்த்துக்கள்"

    என்றும் நட்புடன்,
    புதுவை வேலு
    www.kuzhalinnisai.blogspot.fr

    ReplyDelete
    Replies
    1. தங்கள் கருத்தை ஏற்றுக்கொள்கிறேன்
      இனிய புத்தாண்டு வாழ்த்துகள்
      மிக்க நன்றி.

      Delete

தங்கள் கருத்துகளை வரவேற்கிறேன்.
உங்கள் யாழ்பாவாணன்.