நாட்டில
அரசு கவிழும் என்றால்
மக்களிடையே
வேலையில்லாச் சிக்கல் தான்!
வீட்டில
உறவுகளிடையே முறிவு என்றால்
தலைவர்மாருக்கு
வேலையில்லாச் சிக்கல் தான்!
தெருவெளியில
காதல், மோதல் என்றால்
காளைக்கும் வாலைக்கும்
வேலையில்லாச் சிக்கல் தான்!
நடுவழியில
பிணவாடை வீசும் என்றால்
ஆளுக்காள்
வேலையில்லாச் சிக்கல் தான்!
செய்தி ஏட்டில
எத்தனையோ
இழவுச் செய்தி வந்தாலும்
அரசின் காதுக்கு எட்டல...
என் பாட்டில
எழுதக்கூட
எழுதுகோல் வேண்டக் காசில்லை...
நானும்
பாரதியைப் போல
கரிதுண்டு பிடித்து
தெருவெளியில எழுதப் போறேனுங்க...!
செய்தி:-
இந்தியாவில்
வெள்ளையனுக்கு எதிராக
பாரதி எழுப்பிய போர் முரசெல்லாம்
கரிதுண்டால் எழுதி
தெருச்சுவரெல்லாம்
நிரம்பி வழியக் கிடந்ததாமே!
சான்றுக்கு
பாவலர் வைரமுத்துவின்
"கவிராஜன் கதை" என்னும்
புதுக்கவிதைக் காவியத்தை
படித்துப் பாருங்களேன்!
ஒருவேளை அரசிற்கு காதே இல்லையோ...?
ReplyDeleteஅடுத்த தேர்தல் வரும் வரை
ReplyDeleteஅரசுக்குக் காது கேளாதாம்
இப்படிக்கு
நாடாளுமன்ற நாற்காலி!