Wednesday, July 1, 2015

உங்களுக்கு மகிழ்வூட்பா (க்ளெரிஹ்யு) தெரியுமா?

துளிப்பா (ஹைக்கூ) பற்றியும் அறிந்திருப்பியள்
சென்ரியு என்றொன்றும் இருக்கிறாதாம்
இன்னும் எத்தனையோ இருக்கலாம்
என்றாலும்
குறள்வெண்பா என்பதும் யாவருமறிந்ததே
இணைக்குறள் ஆசிரியப்பா என்பதும்
நீங்கள் அறியாமல் இருக்கமுடியாதே
என்றாலும்
குறும்பா (லிமரிக்) பற்றியும் அறிந்திருப்பியள்
ஆனாலும்
மகிழ்வூட்பா (க்ளெரிஹ்யு) பற்றியும்
உங்களுக்குத் தெரிந்து இருக்கலாம்
எப்படியாயினும் - எனக்கு
மகிழ்வூட்பா (க்ளெரிஹ்யு) பற்றித் தெரியாமையால்
நான் படித்ததைப் பகிருகிறேன் இங்கே!

குறும்பைச் சொல்லிச் சிரிக்க வைக்கும்
ஐந்தடிக் குறும்பாவை விட
நையாண்டி பண்ணிச் சிரிக்க வைக்கும்
நான்கடி மகிழ்வூட்பா (க்ளெரிஹ்யு)
எப்படி என்று எண்ணிப் பாருங்களேன்!

"1, 2 வரிகள் ஒரே வித ரைமிங்கிலும்,
3,4 வரிகள் ஒரே வித ரைமிங்கிலும்
முடிய வேண்டும்." என்று கீழுள்ள
பதிவை ஆக்கியோர் சொல்லுகிறார் பாரும்!
இணைப்பு:
http://kaalapayani.blogspot.com/2009/05/blog-post_11.html

"மிக எளிதான வடிவம்.
மொத்தம் நான்கே வரிகள்.
aa bb என்ற rhyming pattern.
பொதுவாக க்ளெரிஹ்யு கவிதைகள்
ஹாஸ்ய ரசம் ததும்புவனவாக இருந்தாலும்
சீரியஸ் விஷயங்களைக் கூட
நச் எனச் சொல்லலாம்." என்று கீழுள்ள
பதிவை ஆக்கியோர் சொல்லுகிறார் பாரும்!
இணைப்பு:
http://wp.me/pTWRs-69v

"திரையில் அழகாய் மின்னிய பெண்ணவள்
விரைவாய் வீட்டிற்குப் போனதும் அழகற்றவள்
அழகுப்படுத்தினால் எவளும் அழகாய் மின்னலாம்
அழகாய் மின்னயவளை நம்பியவன் ஏமாளி!

தேடல் உள்ளவரை அறிவு பெருகுமே
தேடிப் பொறுக்கிப் படித்தவர் அறிவாளி
பாராமுகமாய் படிப்பைக் கசக்குது என்றவர்
மக்கள்முன் பாராமுகமாய் ஒதுங்கிடும் அறிவிலி!

வாக்குப் போட்டவர் நாட்டில் அலைகின்றார்
வாக்குப் பெற்றவர் நாட்டைக் கவனிக்காராம்
தேர்தல் வந்தால் வேட்பாளர்கள் வருவார்கள்
வென்றதும் நாடாளுமன்ற நாற்காலி துடைப்பாராம்"
என்றவாறு
நான் எழுதிக் கிறுக்கிய கிறுக்கலை
மகிழ்வூட்பா (க்ளெரிஹ்யு) என்றெண்ணாமல் - கொஞ்சம்
மேலுள்ள இணைப்புகளைச் சொடுக்கிப் பார்த்தே
நன்றே படித்துத் தேறி வந்தே - என்
மகிழ்வூட்பாவில் (க்ளெரிஹ்யு) பிழை கண்டுபிடியுங்களேன்!

கீழுள்ள பாவில் என்னை நறுக்கியே
எழுதிப் பார்த்தேன் படித்துப் பாரும்

"யாழ்பாவாணன் பாப்புனையக் கற்றுத்தர வந்தாராம்
வாழ்க்கையில் தொல்லையாம் அடிக்கடி தொடராராம்
பாப்புனைய விரும்பும் உள்ளங்களோ தளராராம்
பாப்புனைய உதவும் பதிவுகளைப் பகிருவாராம்" என

முதலிரு அடிகளில் யாழ்பாவாணனின் இழுபறியும்
ஈற்றிரு அடிகளில் பிறர் பதிவுகளின் பகிர்வும்
நன்றே நடைபெறுவதைப் பாரும் -என்றே
இருவேறு வெளிப்பாட்டைப் பகிர்ந்தேன் - இது தான்
மகிழ்வூட்பா (க்ளெரிஹ்யு) எழுதவுதவும் தகவலா?
எதற்கும் மேலுள்ள இணைப்புகளைச் சொடுக்கி
தெரிந்து கொண்டால் எழுதுவீர் மகிழ்வூட்பா!
பாப்புனைய விரும்பும் உள்ளங்களே - இப்படித் தான்
புதிய புதிய தகவலைத் தேடித் தேடியே
புதிய புதிய பாவண்ணங்களில் இறங்கியே
புதிய புதிய எண்ணங்களை வெளிப்படுத்தியே - நீங்கள்
உங்களைப் பாவலராக அடையாளப்படுத்த முயலுங்கள்!

இதென்னங்க மகிழ்வூட்பா (க்ளெரிஹ்யு) - அன்று
சங்க இலக்கியத்தில் இடம்பெற்று இருந்த
நையாண்டிப் பாடல் (வசைப்பாடல்) ஒன்றைப் பாரும்...
"ஒரு காலடீ நாலிலைப் பந்தலடீ" என்று
கேலியும் கிண்டலுமாய் கம்பர் விட்ட
விடுகதை ஔவையார் காதில் பட்டதும்
தன்னை நையாண்டி செய்த கம்பரை
ஔவையார் வசைபாடித் தீர்க்கிறார் பாரும்!

எட்டேகால் லட்சணமே, எமனேறும் பரியே,
மட்டில் பெரியம்மை வாகனமே, முட்டமேல்
கூரையில்லா வீடே, குலராமன் தூதுவனே,
ஆரையடா சொன்னாயடா!

கீழுள்ள இணைப்பைச் சொடுக்கி - இந்த
சங்க இலக்கியப் பாடல் விளக்கமறியலாம்...
http://thamizharukkaaga.blogspot.com/2012/05/blog-post_20.html

Friday, June 12, 2015

உங்களுக்கும் துளிப்பா (ஹைக்கூ) எழுத வருமே!


ஓலைக் குடிலை நாடி
ஓட்டம் பிடிப்போரைப் பாரென்று
நாற்சந்தியில்
நாலாள் பேசிக்கொள்ள
காதுக்கெட்டிய பக்கமாய்
கண்ணாலே மேய்ந்தேன்...

உண்ணான
கண்ணாளன் வீட்டை
ஆளைஆள் விலத்திக்கொண்டு
"என்னண்ணே!
சுகமாய் இருக்கிறியளே?" என்று
கேள்வி மேல் கேள்வி கேட்டு
சுகமறியும் ஆள்களைக் கண்டேன்...

கணக்கர் சித்திரபுத்திரன் கடையில
காசாளராகப் பணியாற்றும்
ஏழைக் கண்ணாளனுக்கு
வாழைக்குட்டி நல்வாய்ப்புத் தாளில்
கோடி உரூபா பரிசு
விழுந்திருப்பதைக் கேள்விப்பட்டதும்
சுகமறியக் குழுமிய ஆள்களாம்...

காசில்லாதவர் என்று
எல்லோருமே கழித்து விட்டமையால்
ஏழைக் கண்ணாளனுக்கு
எப்பனும் எவரையும் தெரியாது தான்...
இப்ப என்னவென்றால்
வாழைக்குட்டி நல்வாய்ப்புத் தந்த
கோடி உரூபாவைக் கேள்வியுற்று
உறவு பேண வந்திட்டங்களாம்...

என்னமோ ஏதோவென்று
கண்ணாளனைக் கண்டறிய
"காசில்லையென்றதும் கழிச்சுவிட்டவங்க...
காசைக்கண்டதும் கைகுலுக்கலாமோ?
காசே தான் கடவுளடா!" என்றும்
"நேற்றோ என்னை ஒதுக்கி வைத்தவர்
இன்றோ என்னை அணைக்க வருகிறார்
கை நிறையக் காசு!" என்றும்
"நேற்றுவரை வீட்டுக்கு நாய் காவல்
இன்றிலிருந்து நம்மாளுகள் காவல்
கோடி உரூபா நல்வாய்ப்பு!" என்றும்
"நேற்றுவரை கடனிருக்கக் கனவிலே காசு
இன்றிலிருந்துக் கனவின்றித் தூக்கம் ஆச்சு
நல்வாய்ப்பாய் கோடி உரூபா!"  என்றும்
துளிப்பா (கைக்கூ) வாசித்தாரே!

"காதலி! காதலித்துத் தோற்றுப் போ!
பா/கவிதை புனைய வருமாம்" என்று
நானும் பல ஊடகங்களில் படித்தேன்...
பட்ட புண்ணையும் தொட்ட துயரையும்
உள்ளத்து மாற்றங்களையும்
உணர்வோடு வெளிக்கொணர்ந்தால்
கண்ணாளனைப் போலவே
துளிப்பா (கைக்கூ) எழுத வருமே!

பாப்புனைய விரும்பும் உள்ளங்களே!
மேலும், தகவலறிய
உன் சமையலறையில் கட்டுரையா? / கவிதையா?
http://paapunaya.blogspot.com/2014/06/blog-post_20.html

Sunday, May 24, 2015

வாங்க, யாப்பறியாமலும் பாப்புனையலாம் வாங்க!


கண்டேன் அறிஞர் ஒருவரின் பதிவை
(அந்நியன் கணக்கு - ஆக்கம் அறிஞர் கீதா
http://thillaiakathuchronicles.blogspot.com/2015/05/ANNIYAN-KANAKKU.html)
கண்டதும் படித்ததும் - என்
எண்ணத்தில் மீள மீள
எண்ணிப் பார்க்க வைத்த
அடிகளை அப்படியே தருகின்றேன்!

அஞ்சு பைசா திருடினா தப்பா?”
‘‘தப்பில்லைங்க’’
“அஞ்சு கோடி பேர்
அஞ்சு பைசா திருடினா தப்பா?”
‘‘தப்பு மாதிரிதாங்க தெரியுது...’’
“அஞ்சு கோடி பேர்,
அஞ்சு கோடி தடவை
அஞ்சு பைசா திருடினா தப்பா?”
‘‘அய்யோ... பெரிய தப்புங்க...’’  



பதிவைப் படித்த பின்னர் - அந்த
பதிவிற்கான கருத்தாக - நான்
பா/கவிதை போல எழுதிய வரிகளில்
மாற்றம் செய்து பலருக்குக் காண்பித்து
உங்களாலும் பா/கவிதை புனைய முடியுமென
உங்கள் ஆற்றலை வெளிக்கொணர
கடுகளவு முயற்சி எடுக்கிறேன்!
"வாங்க,
யாப்பறியாமலும் பாப்புனையலாம் வாங்க!" என்று
எல்லோரையும் அழைத்திங்கே - அந்த
அறிஞரின் பதிவைப் படித்த பின்
நான் கிறுக்கும்
பா/கவிதை போன்ற வரிகளாயினும் சரி
துளிப்பா, குறும்பா, புதுப்பாவாயினும் சரி
யாப்பறிந்த (மரபுப்) பாக்களில் எதுவாயினும் சரி
உங்கள் கைவண்ணங்களில் ஆக்கி
பின்னூட்டங்களில் இட்டு உதவுங்கள்!

இஞ்சாருங்கோ - எங்களால
பா/கவிதை புனைய முடியாதென
ஒரு போதும்
மறுப்புக் கூற வேண்டாமுங்கோ...
"மிச்சக்காசு கிட்டாமையால் வயிறு கடிக்குதே!" என்றோ
"மிச்சக்காசைச் சுருட்டி வீடு வாசல் கட்டுவாங்களோ!" என்றோ
"மிச்சக்காசுக்கு இனிப்பை இடிக்கிறவங்களால
நம்மாளுங்க நீரிழிவால துன்பப்படுறாங்களே!" என்றோ
"மிச்சக்காசாக
ஒரு உரூபாவாயினும் நடத்துனர் தந்திருந்தால்
ஒரு முடர் தேத்தண்ணி குடித்திருப்பேனே!" என்றோ
உள்ளத்தில் தோன்றிய எண்ணங்களையாவது
வெளிக்கொணர்ந்தால் பா/கவிதை ஆகுமே - அதில்
பா/கவிதை இயல்பு வெளிப்பட்டு விட
யாப்பில் கூட இயல்புத் தொடை என்பாங்க - இனி
உங்களால பா/கவிதை புனைய முடியும் தானே!

இஞ்சாருங்கோ - உங்கள்
யாழ்பாவாணனின் பா/கவிதை போன்ற கிறுக்கலை
கொஞ்சம் படித்துப் பாருங்களேன்...

மிச்சக் காசு கொடுக்க முடியாமைக்கு
மாற்று வழியாக
வேண்டாம் வேண்டாமென
இனிப்பை இடிக்கிறாங்க...
இதெல்லாம்
எப்ப இருந்து என்றால்
அந்தக் காலத்து
கலைஞர் கருணாநிதி ஆட்சியில் இருந்து
என்கிறாங்க,,,
ஈழத்தில இப்படி
இனிப்பை இடிக்கிற வழக்கம்
தொடங்கின காலத்தில
கருணாநிதி ஆட்சிக் காலச் செய்தி என
நாளேடு ஒன்றில் படித்த நினைவு!
இப்ப என்னவென்றால்
இனிப்பை இடிக்கிற வழக்கம் போய்
எங்கள் வயிற்றிலடிக்கிற கதை
தொடங்கிற்று...
சில்லறை இல்லை - அடுத்த
வருகையின் போது தரலாமென
சிலர் சுருட்டுறாங்க...
சில்லறை இல்லை என்றால்
மலடியைப் பிள்ளை பெற வைக்க ஏலுமே என்று
என் பெண்டாட்டியையும் அழவைச்சு
(எமக்குக் குழந்தைகள் இல்லை)
எங்கட வயிற்றிலடிப்பவங்க
பெருகிக் கிட்டே இருக்காங்க!
வணிக நிலையங்களில்
இனிப்பை இடிப்பாங்க என்றால்
தெருக்கோடியிலும் (தெருவெளி வணிகர்கள்) சரி
ஊர்திப்பயணங்களிலும் (நடத்துனர்கள்) சரி
சில்லறை இல்லை என்றெல்லோ
பகற் கொள்ளை அடிக்கிறாங்க!
ஈழத்தில... இந்தியாவில... உலகத்தில...
இது உலாவுவதாகத் தகவல்!

என்னங்கோ - உங்கள்
யாழ்பாவாணனின் கிறுக்கலைப் படித்தாச்சோ
இனி என்னங்க இழுபறி - யாழ்பாவாணனின்
பாவண்ணத்தைத் தோற்கடிக்கவாவது - உங்கள்
கைவண்ணங்களாலே பாப்புனைந்து வெளியிட்டு
எல்லோரையும் யாப்பறிந்து பாப்புனைய
விரும்ப (ஆசை) வைக்க முன்வாருங்களேன்!

Saturday, May 23, 2015

இலக்கணம் அறிந்து எழுதுகோல் ஏந்து


"நான் என்ன
என்னைக் காதலி என்று தானே கேட்டேன்!
அதற்கு - நீ
என் கன்னம் சிவந்து வீங்க
காலணியால் அடிப்பாயா?" என்று ஆணெழுத
"நானாவது
கன்னம் சிவந்து வீங்க
காலணியால் அடித்தேன்! - என்
கணவன் அருகில் இருந்திருந்தால்
என்னைக் காதலி என்று கேட்டதுமே
என் மனைவியிடமா கேட்கின்றாய் என்று - உன்
கழுத்தையே அறுத்திருப்பாரே!" என்று பெண் பதிலிறுக்க
அழகான பா/கவிதை என்று படித்தவர் புகழ
மிச்சம் சொல்லவும் வேண்டுமா? - தன்னை
பாவலரென்றே முழங்கித் திரிவர் சிறியர்!
இலக்கியம் தோன்றிய பின்னரே
இலக்கணம் தோன்றியது என்பதை
கணக்கில் வைத்துக்கொண்டு - எவரும்
கதை, கட்டுரை, நாடகம் எழுதினாலும்
பா/கவிதை, இசைப்பாட்டு, திரைப்பாடல் எழுத
இயலாதென்பதை எள்ளளவேனும் அறிந்தீரா?
எழுத்து, அசை, சீர், தளை,
பிணை, அடி, தொடை,
பா, பாவினம் என ஒன்பது
உறுப்புகள் கொண்ட தொகுப்பே
பாவிலக்கணம் என்றுரைக்கிறார்
"யாப்பரங்கம்" நூலாசிரியர்
புலவர் வெற்றியழகன்! - இங்கே
தமிழில் 30 + 1 எழுத்துகளா
தமிழில் 247 எழுத்துகளா
என்றெல்லோ மோதுகினம்!
"உன்கண்ணில் நீர்வழிந்தால் -- என்னெஞ்சில்
   உதிரங் கொட்டு தடீ;" என்பது
காதல் கவிதையா? குழந்தைக் கவிதையா?
என்றெல்லோ மோதுகினம்!
பாரதி பாடலும் நன்னூல் அறிவும்
எள்ளளவேனும் அறிந்திருந்தால் கூட
பா/கவிதை புனையலாம் காண் - நீ
பாப்புனைய விரும்பும் ஒருவரா - அப்ப
பா/கவிதை ஒன்றைக் கண்டால்
படித்துப் பாடுபொருள் கண்டுபிடி - மேலும்
பவணந்தி முனிவர் எழுதிய நன்னூலில்
தமிழில் 369 எழுத்துகள் உண்டாம் - நான்
கண்டேன் ஊமைக்கனவுகள் தளத்தில் - பாரும்
பாப்புனைய விரும்பும் எல்லோருக்கும் ஏற்ற
இலக்கண ஆய்வுப்பாடம் ஆங்கே இருக்கே!
இழுத்தடிப்பு வேண்டாம் இப்பவே செல்லங்கே
கீழுள்ள இணைப்பைச் சொடுக்கியே படித்தங்கே
http://oomaikkanavugal.blogspot.com/2015/04/blog-post_24.html
இலக்கணம் அறிந்து தெளிந்த பின்
எழுதுகோல் ஏந்து இலகுவாய்ப் பாப்புனையலாம்!


Tuesday, May 5, 2015

இசைக்குப் பாடல் புனையலாம் வாருங்கள்

இசைக்குப் பாடல் புனைவது பற்றிய அடிப்படைக்குறிப்புகளை கீழ்வரும் இணைப்பில் ஏற்கனவே தந்திருக்கிறேன்.
http://paapunaya.blogspot.com/2014/01/blog-post_11.html
மேலும், இசைக்குப் பாடல் புனையும் வேளை எதுகை, மோனை போன்ற இலக்கணத் தெளிவு வேண்டும். அவ்வாறு எல்லாம் சரிபார்த்தீர்களா என்று கீழ்வரும் இணைப்பில் ஏற்கனவே தந்திருக்கிறேன்.
http://paapunaya.blogspot.com/2014/09/blog-post_27.html

ஆனால், இன்று கவியரசர் கண்ணதாசன் வரிகள் எப்படிப் பாடலாயிற்று என்று பாருங்கள். ஈற்றுச் சீர் 'தான்' என்று முடியத் தக்கதாக கண்ணதாசன் ஆக்கிய கவிதையைப் பாருங்கள். இப்படி இசை சொட்டப் பாப்புனைந்தால், இசைக்குப் பாடல் புனைய வருமே

அத்தான்...என்னத்தான்...
அவர் என்னைத்தான்...
எப்படி சொல்வேனடி

அவர் கையைத்தான்
கொண்டு மெல்லத்தான்
வந்து கண்ணைத்தான்
எப்படி சொல்வேனடி

ஏனத்தான் என்னைப் பாரத்தான்
கேளத்தான் என்று சொல்லித்தான்
சென்ற பெண்ணைத்தான்
கண்டு துடித்தான் அழைத்தான்
சிரித்தான் அணைத்தான்
எப்படி சொல்வேனடி

மொட்டுத்தான் கன்னி சிட்டுத்தான்
முத்துத்தான் உடல் பட்டுத்தான்
என்று தொட்டுத்தான்
கையில் இணைத்தான் வளைத்தான்
சிரித்தான் அணைத்தான்
எப்படி சொல்வேனடி

ஈற்றுச் சீர் 'தான்' என்று முடியத் தக்கதாக கவியரசர் கண்ணதாசன் ஆக்கிய வரிகளில் இசை துள்ளி விளையாடுவதைப் பார்த்தீர்களா? திரை இசைப் பாடல்கள் எல்லாமே இசை துள்ளி விளையாடும் பா/கவிதை ஆக இருந்தே வந்திருக்கிறது. மேலும், பிறமொழிச் சொல்கள் உட்புகுத்தாத/ திணிக்காத பா/கவிதை வரிகளாக இவ்வெடுத்துக்காட்டு அமைந்திருக்கிறது. நீங்களும் இப்படித் தூயதமிழில் துள்ளி விளையாடும் இசையுள்ள பாக்கள்/கவிதைகள் புனைந்து பாருங்கள். பின் திரை இசைப் பாடல் போல அமைய இசைச்சுப் பாருங்கள்; அதற்கேற்ப உங்கள் பா/கவிதை வரிகளை ஒழுங்குபடுத்துங்கள். அவ்வாறு கண்ணதாசன் ஆக்கிய கவிதை வரிகள் எவ்வாறு ஒழுங்குபடுத்தப்பட்டிருக்கிறது என்பதைக் கீழே பாருங்கள்.

பாடல்: அத்தான் என்னத்தான் அவர் என்னைத்தான்
குரல்: P.சுசீலா
வரிகள்: கண்ணதாசன்
படம் : பாவமன்னிப்பு
இசை: விஸ்வநாதன் - இராமமூர்த்தி

அத்தான்...என்னத்தான்...அவர் என்னைத்தான்...
எப்படி சொல்வேனடி
அவர் கையைத்தான் கொண்டு மெல்லத்தான் வந்து கண்ணைத்தான்
எப்படி சொல்வேனடி
(அத்தான்)

ஏனத்தான் என்னைப் பாரத்தான் கேளத்தான் என்று சொல்லித்தான் (2)
சென்ற பெண்ணைத்தான் கண்டு துடித்தான் அழைத்தான் சிரித்தான் அணைத்தான்
எப்படி சொல்வேனடி
(அத்தான்)

மொட்டுத்தான் கன்னி சிட்டுத்தான் முத்துத்தான் உடல் பட்டுத்தான் (2)
என்று தொட்டுத்தான் கையில் இணைத்தான் வளைத்தான் சிரித்தான் அணைத்தான்
எப்படி சொல்வேனடி
(அத்தான்)

நீங்களும் ஆக்கிய உங்கள் பா/கவிதை வரிகளை ஒழுங்குபடுத்தியதும் இசைச்சுப் பார்க்கையில் திரை இசைப் பாடல் போல அமைந்திருந்ததா? இதோ கண்ணதாசன் ஆக்கிய கவிதை வரிகள் ஒழுங்குபடுத்தப்பட்டதும் திரை இசைப் பாடலாக ஒரு காலத்தில் மின்னிய பாடலைக் கேட்டுப் பாருங்கள்.


மேலுள்ள பாடல் வரிகளைப் படித்த பின் பாடலையும் கேட்டுப் பார்த்து என்னதான் புரிந்து கொண்டீர்கள்? 'தான்' என்றவாறு ஓரிசையில் முடியத்தக்கதாக பாடல் அமைவைதைக் கண்டிருப்பீரே! அந்த இசையே பாடலுக்கு உயிர் கொடுத்திருப்பதை அறிவீர்களா? இசையுள்ள பா/கவிதை எழுத முடிந்தால்; அதற்கும் இசை அமைக்கலாம். இசை மெட்டுக்கும் பாடல் எழுதலாம். எல்லாம் உங்கள் பயிற்சியிலேயே தங்கியிருக்கிறது.

மேலும், பாடல் எழுதப் பயிற்சியாகக் கீழொரு பாடலைத் தருகிறேன். அதில், முதல் பகுதியில் 'ன்று' என முடியுமாறும் இரண்டாம் பகுதியில் 'ஓ' என முடியுமாறும் அடுத்தடுத்து இவ்வாறு ஓரிசையில் முடியத்தக்கதாக பாடல் அமைகின்றது. பாடல் வரிகள் திரையில் தோன்றுவதால் அதனைப் பார்த்துப் பார்த்து எழுதலாம். பார்த்து எழுதிய வரிகளை இசைத்துப் பாருங்கள்; அப்போது இசைக்குப் பாடல் புனையலாம் என எண்ணத் தோன்றும்.

பாடல்: நினைவிலே மனைவி என்று
படம்: ச ரி க ம ப
பாடியவர்: S.P.பாலசுப்பிரமணியம்
எழுதியவர்: உதயனன்.
இசை: ஸ்ரீகுமார்


இந்தப் பாடலையும் கேட்ட பின் இசைக்குப் பாடல் புனைய நம்பிக்கை வந்து விட்டதா? இல்லையெனில் பல பாடல்களைக் கேட்டுப் பயிற்சி செய்து பாருங்கள். பயிற்சி செய்திருப்பின் கீழ்வரும் இணைப்பில் இசைக்குப் பாடல் புனைவதற்கான போட்டி இடம்பெறுகிறது. அதில் பங்கெடுத்துத் திரைப்படங்களில் இசைக்குப் பாடல் புனையலாம் வாருங்கள்.

இதோ வல்வையூரானின் “நீங்க எழுதுற பாட்டு” என்ற தலைப்பில் "மாபெரும் உலகம் தழுவிய பாடலாசிரியர் போட்டி 2015" இற்கான அறிவிப்பின் இணைப்பு.
http://valvaiyooraan.blogspot.com/2015/04/blog-post.html